நட்பும், கசப்பும், வெறுப்பும் தமிழ்ச் சினிமாவில் இல்லை என்பதாக எவரும் சொல்ல மாட்டார்கள். மாறாக பொய் சொல்வார்கள்.
நாங்கள் நல்ல நண்பர்கள் என்று சொல்கிறவர்கள் “எப்படா சான்ஸ் கிடைக்கும் சாய்க்கலாம் “என வாய்ப்புக்காக காத்திருப்பார்கள்.
“எங்களுக்கு தொழிலில்தான் போட்டி”என சொல்லிக் கொள்வதுதான் வேடிக்கை..
தமிழ்ச்சினிமாவில் பல இயக்குநர்கள் நடிகர்களை சார்ந்தே இருக்கிறார்கள். நடிகர்களும் தங்களுக்காக ஒரு கோஷ்டியை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ஆனால் அதை வெளிப்படுத்திக் கொள்வதில்லை.
இதுதானா அது?
வடசென்னையின் இயக்குநர் வெற்றி மாறன். தனுஷின் படங்களைத் தொடர்ச்சியாக இயக்கி வருகிறவர்.
அண்மையில் வடசென்னை படம் தொடர்பான ஒரு கலந்துரையாடல் நடந்திருக்கிறது.
“விஜய்யுடன் படம் பண்ணுவீர்களா?” என ஒருவர் கேட்டதற்கு ஆத்திரம் கலந்த பதில் வந்திருக்கிறது. “இது துயரமான கேள்வி”
இது அன்பினைக் காட்டுகிறதா? வெறுப்பினை சொல்கிறதா?