முனி 3 – காஞ்சனா 2 படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி சுமார் 100 கோடி வசூலை வாரி குவித்தது…இந்நிலையில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டது.(ஒரே ஒரு பாடல் காட்சியைத் தவிர….)காஞ்சனா 3 ,திகில் பழிவாங்கும் பாணியிலான நகைச்சுவை பேய்படம். இதில் ராகவா லாரன்சுடன் இணைந்து ஓவியா, வேதிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம், முனி படத்தின் நாலாவது பாகமாகவும், காஞ்சனாபடத்தின் மூன்றாவது பாகமாகவும் உருவாகியுள்ளது..தற்போது இப் படத்தின் டப்பிங்,எடிட்டிங், பின்னணி இசைகோர்ப்பு உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ம் தேதி திரைக்கு வர உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது.