சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் சவுந்தர்யா புத்தாண்டில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்பது வெளிவந்துள்ள செய்தி. விசாகன் என்கிற பிரபல தொழிலதிபர் தான் மணமகன், வஞ்சகர் உலகம் என்கிற படத்தில் நடித்திருப்பவர் .பிரபல பத்திரிகை அதிபர் குடும்பத்துப் பெண்ணை காதலித்து கல்யாணம் செய்தவர். அந்த கல்யாணம் குறுகிய காலத்திலேயே விடை பெற்றது. இதனால்தானோ என்னவோ தனது மறுமணத்தை பெற்றோர் முடிவுக்கே விட்டிருக்கிறார் விசாகன்.
விசாகனின் அம்மாவும் சவுந்தர்யாவின் அம்மா லதா ரஜினிகாந்தும் சந்தித்துப் பேசித்தான் விசாகன்-சவுந்தர்யா கல்யாணம் முடிவாகி இருக்கிறது, விசாகனின் குடும்பம் திராவிட முன்னேற்றக் கழகம் சார்ந்த குடும்பமாகும். கலைஞர் காலத்தில் நெருக்கம்.தற்போது எப்படியோ தெரியவில்லை. அண்மையில் பிஜேபி அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இந்த குடும்பத்தாரை சந்தித்துப் பேசி இருக்கிறார். விசாகனின் அப்பா வணங்காமுடியை சந்தித்து மோடி அரசின் நான்கு ஆண்டு சாதனை புத்தகத்தை வழங்கி இருக்கிறார்.