ஆள்பாதி ஆடைபாதி இவைதான் மனிதனை முழுமையாக்குகிறது என்பார்கள். ஆக கடவுளாகவே பார்க்கப்படுகிற நடிகர்கள் தங்களை உயர்த்திக்காட்ட பங்களா,கார் என பவிசு காட்ட வேண்டியதிருக்கிறது.
சிம்புவுக்கு இளைஞர் வட்டம் பெரும் வட்டமாக இருக்கிறது. அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். எல்லா நடிகர்களின் ரசிகர்களும் இவருக்கும் ரசிகர்களாகவே இருக்கிறார்கள்.
இப்படி ஒட்டு மொத்த ஆதரவு இருக்கிற சிம்பு தனது கவுரவத்தை உயர்த்திக் கொள்ளவேண்டாமா?
நாலு கோடி ரூபாய் மதிப்புள்ள ‘பெண்ட்லே ‘ காரை வாங்க முடிவு செய்திருக்கிறார். வெளிநாட்டுக்கார்.
அதன் டெமோ நேற்று நடந்தது.ஓட்டிப் பார்த்திருக்கிறார்.