நடிக்கும் படங்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகிறார் ஜோதிகா.
திருமணத்திற்கு பிறகு அவர் நடித்த ’36 வயதினிலே’ படம் வெற்றி பெற்றத்தைத் தொடர்ந்து ‘மகளிர் மட்டும்’ படமும் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது.
தனக்கு முக்கியத்துவம் தரும் கதை மட்டும் தான் வேண்டும் என்றில்லாமல், நிஜ வாழ்க்கையோடு ஒன்றிப் போகும் கதாபாத்திரமாகவும் இருக்க வேண்டும்என்பதில் கவனமாக இருக்கிறார்.
இதன் மூலம் முன்பை விட அதிக ரசிகர்களை தன்வசப்படுத்தி வருகிறார்.
அதற்கு சான்றாக இந்த வாரம் வெளியாகிறது அவர் நடித்த ‘காற்றின் மொழி’.
இப்படம் வெளியாவதற்கு முன்பே ஜோதிகாவைப் பற்றியும், படத்தைப் பற்றியும் மிகுந்த எதிர்பார்ப்பை (குறிப்பாக பெண்களிடம்) ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், ஜோதிகாவை வைத்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தனது 21-வது படத்தைத் தயாரிக்கவுள்ளது. இதற்கான பூஜை இன்று (14.11.2018) நடத்தப்பட்டது. இந்த வார இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும். இப்படத்தை அறிமுக இயக்குநர் ராஜ் இயக்குகிறார்.
இதில் ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பேரடி, கவிதா பாரதி மற்றும் பல முக்கிய நடிகர், நடிகைகள் நடிக்கவுள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் : இசை – ஸீன் ரோல்டன், ஒளிப்பதிவு – கோகுல் பென்னி, படத்தொகுப்பு – பிலோமின் ராஜ், கலை – பவல் குமார், வசனம் – பாரதி தம்பி, சண்டைப்பயிற்சி – சுதேஷ், தயாரிப்பு நிர்வாகம் – அரவிந்த் பாஸ்கரன், மேலாளர்கள் – சிராஜ் & ராஜாராம் மற்றும் மக்கள் தொடர்பு – ஜான்சன்
இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில்எஸ்.ஆர் . பிரகாஷ் மற்றும் எஸ்.ஆர் பிரபு தயாரிக்கும் இவர்கள்- செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘நந்த கோபாலகுமரன்’ NGK படத்தை தயாரித்து வருகிறார்கள்.