இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அடிக்கடி மோதல் நடப்பது மாதிரி அஜித் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் மோதிக் கொள்வது வழக்கமாகி விட்டது. நல்ல வேளை துருப்பிடித்த வார்த்தை பிரயோகம் இதுவரை காணப்படவில்லை. யார் யாருடன் மோதி இருக்கிறோம் என்பதை ‘தல’ ரசிகர்கள் பட்டியல் போட்டிருக்கிறார்கள். விஜய்யை ஒரு தொலைக்காட்சி தாங்கிப் பிடிப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார்கள். தளபதி,தல இருவருக்குமே வலுவான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மைதான்.தல ரசிகர்கள் இன்று சண்டையை தொடங்கி வைத்திருக்கிறார்கள்.