கஜா புயலுக்கு மத்தியில் போராடி ஜெயித்து திரைக்கு வந்திருக்கிறார் உத்தரவு மகாராஜா. கதையின் முற்பாதியை உதயாவும் பிற்பாதியை பிரபுவும் நிறைவு செய்திருக்கிறார்கள்.
ஐடெண்டி டிசார்டர் உதயாவுக்கு.! இவருக்கு காதுக்குள் மைக்ரோசிப் பொருத்தி வித்தியாசமான நோயுடன் விறுவிறுப்பாக திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் ஆசிப் குரைஷி..ரவியாக இருக்கும் உதயா வாசுவாக மாறி நானூறு கோடியை கண்டெய்னருடன் கடத்திக் கொண்டு போய் விடுகிறார். ஏன்,யார் அவரை அப்படி ஆட்டிப்படைக்கிறார்கள் என்பது ரசிக்கும்படியான கதை.
கடுமையாக உழைத்திருக்கிறார் உதயா . மண்டைக்குள் ரைஸ் ஹல்லர் ஓடுகிற எபெக்ட் கிடைத்ததும் அவர் படுகிற பாடு ,உத்தரவு மகாராஜா என்றபடியே ஓடுகிற அவஸ்தை, ஒரு நடிகனுக்கு வைக்கப்பட்ட தேர்வாகவே தெரிகிறது. சிறப்பு பிரிவில் தேர்வாகி விட்டார்.
படத்தின் முழுச் சுமையையும் தாங்கி இருப்பவர் இளையதிலகம் பிரபு. அவரை அறியாமலேயே சில இடங்களில் நடிகர் திலகம் வெளிப்பட்டுவிடுகிறார். அந்த கம்பீரமான நடை அந்த திலகத்துக்கு மட்டுமே வரும் .வாரிசுக்கு வருவதில் தப்பில்லையே!
பிரியங்கா நல்வரவு.
தாங்க முடியாத இம்சை கோவை சரளா.
ஜெயம்கொண்டாரை நினைவில் வைத்திருப்பதற்காக வாழ்த்துகள்.