‘தத்ரூபமாக நடிக்க வேண்டும் ‘ என்கிற போபியா பாலா,பாரதிராஜா மிஷ்கின் ஆகியோருக்கு உண்டு. இயல்பாக நடிக்காதவர்கள் அவர்களிடம் அடி வாங்கியது நிஜம்.
“ராட்சசனிடம் மாட்டியாச்சு “என்று மனம் நொந்தவர்களும் இருக்கிறார்கள்.
மாறு கண்ணாக நடித்து இன்றுவரை அவஸ்தையை அனுபவிக்கிறவர் விஷால். பாலா என்றாலே பாஸ்போர்ட் இல்லாமல் பாரினுக்கு ஓடிப் போய்விடுவார்.
இதெல்லாம் இருக்கட்டும் .நடப்பு மேட்டருக்கு வருவோம். தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி, மிஷ்கின் சமந்தா ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் நதியாவும் நடித்திருந்தார்.ஆனால் விலகி விட்டார்.
என்ன காரணம்?
“நடிக்கத் தெரியவில்லை’ என மிஷ்கின் சொன்னாராம்.
எதற்காக அப்படி சொன்னாராம்?
ஒரு காட்சியில் மிஷ்கினை அறையவேண்டும் நதியா. அறைந்திருக்கிறார். இயக்குநருக்கு திருப்தி இல்லை. மறுபடியும் அறை விட்டிருக்கிறார். மிஷ்கினுக்கும் திருப்தி இல்லை. எத்தனையோ டேக் வாங்கியும் காட்சி எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. காண்டாகிவிட்டார் மிஷ்கின்.
” என்னால் நடிக்கத் தெரியாதவர்களுடன் நடிக்க முடியாது.நான் வேணும்னா விலகிவிடுகிறேன் “என்று மிஷ்கின் சொல்ல ,ஆத்திரப்பட்ட நதியா “நானே விலகிடுறேன்”என்று சொல்லி இருக்கிறார் என்கிறார்கள்.
அவருக்குப் பதிலாக நடித்த ரம்யா கிருஷ்ணன் இரண்டே அறைகளில் டேக்கை ஓகே செய்திருக்கிறார். செம அடி!