கலைஞரின் கதை வசனத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கண்ணம்மா என்ற படத்தை இயக்கியவர் பாபாவிக்ரம் .இவர் தற்போது ‘சொல்லுங்கண்ணே சொல்லுங்க’ புகழ் இமான் அண்ணாச்சியை கதையின் நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கி இசையமைத்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் இமான் அண்ணாச்சி பாடகராகவும் களமிறங்கி உள்ளாராம் . பாபாவிக்ரம் எழுதி இசையமைத்த நெத்திலி மீன் குழம்பு என தொடங்கும் பாடலைஇமான் அண்ணாச்சி பாடியுள்ளாராம் இமான் அண்ணாச்சிக்கு இந்தப் படத்தில் மூன்று ஜோடிகள் என்கிறார்கள். கலக்கல் காமெடி படமாக உருவாகி வரும் இப்படம் இமான் அண்ணாச்சிக்கு ஒரு மைல் கல்லாக அமையும் என்கிறது படக்குழு.