நடிகை ரோஜா ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த ரோஜா,தமிழில், 1992ஆம் ஆண்டு ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் வெளியான செம்பருத்தி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர். அதன்பின்னர்,சூரியன்,
,உழைப்பாளி,என் ஆசை ராசாவே உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்,கடந்த 2002ஆம் ஆண்டு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆர்.கே செல்வமணியை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் ஆகியோர் உள்ளனர்.மகள் அன்ஷு மாலிகாவிற்கு தற்போது 15 வயதாகிறது. இவர் பாடல் மற்றும் நடனம் கற்றும் வருகிறார். நடிகை ரோஜா தற்போது தீவிரஅரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இணைந்து தற்போது ஆந்திர சட்டப்பேரவை உறுப்பினராகவும் உள்ளார்.இந்நிலையில் தனது 44 வது பிறந்த நாள் விழாவை, நகரி மக்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.