உலகநாயகனின் இரண்டாவது வாரிசு அக்சரா ஹாசனின் அந்தரங்க புகைபடங்கள் இணையதளங்களில் லீக் ஆகி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது . இது குறித்து அக்சராஹாசன் மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணையில்,அக்சராவின் முன்னாள் காதலர் நடிகை ரதிஅக்னிஹோத்ரியின் மகன் தனுஜ் விர்வானி சிக்கினார்.இந்நிலையில்,
தனுஜ் விர்வானி கூறியதாவது: ‘அக்ஷராவுக்கு இதுபோல் ஒரு சம்பவம் நடந்ததை அறிந்து அப்செட் ஆனேன். நாங்கள் ஒருவரையொருவர் காதலித்தபோது, அக்ஷராவை பாதுகாப்புடன் கவனித்துக்கொண்டேன். இருவரும் பிரிந்த பிறகும் அதே பாதுகாப்பு உணர்வை அக்ஷரா மீது நான் வைத்திருக்கிறேன்.இருவரும் எங்களது அந்தரங்க புகைப்படங்களை பரிமாறிக்கொண்டது உண்மைதான். அதை நான் முழுமையாக அழித்துவிட்டேன். ஆனால், தொழில்நுட்ப திருட்டு நடந்திருக்கிறது. எனவே, என் செல்போனில் இருந்துதான் அக்ஷரா படங்கள் வெளியானது என்ற கேள்விக்கே இடமில்லை. தற்போது நாங்கள் ஆபத்தான தருணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என்னிடம் போலீஸ் விசாரித்தால் , உரிய பதில் அளிப்பேன்என்கிறார்.போலீசாரும் இது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இந்நிலையில்,தந்தையை போலவே மனதைரியமும், துணிச்சலும் கொண்ட அக்சரா ஹாசன் தற்போது இயல்பு நிலைக்கு வந்துள்ளார். எந்த கவலையும் இல்லாமல் மலேஷியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் தனது மன தைரியத்தை வெளிகாட்டும் விதமாக மிக உயரத்தில் இருந்து பஞ்சி ஜம்ப் செய்துள்ளார். அந்த விடீயோவையும் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். வைரலாகும் இவ்வீடியோவை பார்த்த பலரும் அக்சராவை பாராட்டி வருகின்றனர்.