சின்னத்திரைத் தொகுப்பாளராக தன திரையுலபயனத்தை தொடங்கிய சிவகார்த்திக்கேயன் தமிழில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார். சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் அனைத்துமே வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைஅவரது ரசிகர்களாக இருப்பதே இதற்குக் காரணம். இவருக்கும் நடிகர் தனுசிற்கும் இடையே பனிப்போர் நடந்துவருவதாக கோடம்பாக்கம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற பட விழா ஒன்றில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் பேசியதாவது:-‘தமிழ் சினிமாவில் நான் அறிமுகமான ‘மெரீனா’ படத்தில் என்னுடைய சம்பளம் ரூ.10 ஆயிரம்தான். ஆனால், கடைசி படத்திற்கு நான் வாங்கிய சம்பளம் ரூ.3 கோடிக்கும் மேல்.அதேபோல், சினிமாவில் என்னுடைய நெருங்கிய தோழிகள் ஹன்சிகாவும், ஸ்ரீதிவ்யாவும்தான். அவர்கள்தான் என்னிடம் அடிக்கடி பேசி வருகிறார்கள்.தனுஷ் எனக்கு நண்பன் இல்லை. ஒரு நண்பனாக நாம் யார் மேலாவது கை போட்டு பேசலாம். ஆனால், அவர் மீது அப்படி கைபோட்டு பேசமுடியாது.ஏனென்றால், அவர் எனக்கு சீனியர். அதனாலேயே அவரிடமிருந்து கொஞ்சம் விலகியே இருக்கிறேன். அவர்மீது எனக்கு எப்போதுமே தனி மரியாதை இருக்கிறது. மற்றபடி எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை.நான் தொடர்ந்து பொழுதுபோக்கான திரைப்படங்களிலேயே நடிக்க ஆசைப்படுகிறேன். இப்போதைக்கு வேறு எந்த புது முயற்சியிலும் இறங்கப் போவதில்லை. என்னுடைய அடுத்த படம் ரொமான்டிக் காமெடியாக இருக்கும் என்கிறார்..