கார்த்திகை முதல் தேதியே களை கட்டிவிட்டது ஐயப்பன் சரண கோஷம். நண்டு சிண்டெல்லாம் மாலை போடுவதைப் பார்க்க முடிந்தது. எல்லாம் சுப்ரீம் கோர்ட்டு மகிமைதான்!
பெண்களும் சபரிமலை செல்லலாம் தரிசிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் சொன்னபிறகு புதுமைப் பெண்களும் மாலை போட ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் அவர்களால் மலை ஏறமுடியாமல் திரும்ப அனுப்பி வைக்கப்பட்டு விடுகிறார்கள்.
சினிமாக்காரர்களால் சும்மா இருக்க முடியுமா? ஐயப்பனை படமாக்க ஆரம்பித்து விட்டார்கள். பிருத்விராஜ்தான் ஐயப்பன். டைரக்டர் ஷங்கர் ராமகிருஷ்ணன்.
“நானும் ஷங்கரும் எப்போதோ பேசிக்கொண்டது. இப்போதுதான் காலம் கனிந்திருக்கிறது .எல்லாம் அவர் அருள்! சரணம் ஐயப்பா!” என்கிறார் பிருத்விராஜ். சினிமா ஐயப்பனை தடையில்லாமல் பெண்களும் தரிசிக்கலாம்.
சுவாமியே சரணம் ஐயப்பா!