“பேரறிவாளன் உள்பட ஏழு தமிழர்களைப் பற்றியே தெரியல. நீங்களெல்லாம் தமிழக அரசியல் பற்றி பேசலாமா ?”என சூப்பர் ஸ்டார் ரஜினியை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் புரட்சி கலைஞர் சரத்குமார் விளாசி இருக்கிறார்.
விமான நிலைய இண்டர்வியூ என்றாலே நடிகர்களை வாரி விடும் போலிருக்கிறது. தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் காட்டமாகியது விமான நிலையத்தில்தானே! அதே விமான நிலையத்தில்தான் ரஜினிகாந்தும் மாட்டிக்கொண்டார்.
சென்னைக்கு வந்து இறங்கிய ரஜினிக்கு சோதனையாக அமைந்திருந்தது அன்றைய பத்திரிகையாளர் சந்திப்பு.
பேரறிவாளன் உள்பட சிறையில் வாடிக்கொண்டிருக்கிற ஏழு தமிழர்களைப் பற்றிய கேள்வி.
“எந்த ஏழு பேர்…….. ,எனக்குத் தெரியாதுங்க !” என்று நடையை கட்டிய ரஜினி மறுநாள் பல்டி அடித்தது தெரிந்த கதைதான்.!
இதைப் பற்றி சரத்குமார் கருத்து தெரிவித்தபோது “ஏழு தமிழர்களைப் பற்றித் தெரியாதவர்கள் தமிழக அரசியல் பற்றி பேசக் கூடாது. வந்தாரை வாழ வைப்போம் .ஆனால் ஆள விடமாட்டோம்” என்றார்.