நடிகர் ரஜினிகாந்த் ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ள படம் 2 . ஓ. இந்த படத்தை லைகா பட நிறுவனம் தயாரித்துள்ளது.இதில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்க, பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அக்சய்குமார் வில்லனாக நடித்துள்ளார்.வரும் நவம்பர் 29-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.இந்நிலையில் தற்போது ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு ஒரு கட்டுப்பாடுகளை விதித்து அறிக்கை ஒன்றை தனதுஅகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரசிகர் மன்றங்களுக்கு என வாங்கும் டிக்கெட்டுகளை எக்காரணத்தை கொண்டு பிளாக்கில் விற்க கூடாது.ரசிகர்களிடம் இருந்து தியேட்டர் நிர்வாகம் இருக்கைக்கான கட்டணம் பெற
வேண்டும். கூடுதல் கட்டணங்களை வசூலிக்க கூடாது.இவைகளை மீறும் மன்ற நிர்வாகிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.