தமிழ்,தெலுங்கு திரையுலகில் உள்ள சில பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி.இதையடுத்து இவரை தெலுங்கு திரையுலகினர் ஒதுக்கித் தள்ள, கோலிவுட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு என்பதற்கேற்ப தன்மீது பாலியல் புகார் சொன்ன ஸ்ரீ ரெட்டிக்கு ராகவா லாரன்ஸ் தனது புதிய படத்தில் வாய்ப்பு அளித்துள்ளார்.(மீடியா முன்பு ஸ்ரீ ரெட்டி ஆடிஷனில் கலந்து கொண்டு சிறப்பாக நடித்தால் தனது படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறிய ராகவா லாரன்ஸ், மீடியா முன்பு ஆடிஷன் வைக்காமலேயே ஸ்ரீ ரெட்டிக்கு வாய்ப்பு அளித்துள்ளது என்பதெல்லாம் வேறு விஷயம்).இந்நிலையில், எனக்கு பட வாய்ப்பு கொடுத்து மறுவாழ்வு அளித்துள்ளார் ராகவா லாரன்ஸ். நான் அவரின் வீட்டிற்கு சென்றபோது அனைவரும் என்னிடம் அன்பாக நடந்த கொண்டனர்.நடந்தது நடந்து போச்சு . தயவு செய்து என்னையும், ராகவா லாரன்ஸ் மாஸ்டரையும் கிண்டலடிக்காதீங்க என வீடியோ பதிவு ஒன்றின் மூலம் கோரிக்கைவிடுத்துள்ளார்.பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்ததாக ராகவா லாரன்ஸ் மீது கூறிய குற்றச்சாட்டு என்னவானது? நடந்தது என்ன ? என பலரும் ஸ்ரீ ரெட்டிக்கு கேள்வி விடுத்துள்ளனர்.
My Words about Raghava Lawrence gaaru #SriReddy #PLEASE pic.twitter.com/8HDHseCdxq
— Sri Reddy (@MsSriReddy) November 17, 2018