தஞ்சைப் பூமியை தாறுமாறாக கிழித்துப் போட்டு விட்டுப் போயிருக்கும் கஜா புயலின் முழுமையான சேதாரக் கணக்கு இன்னும் வரவில்லை.
அமைச்சர் பெருமக்களும் அங்கு செல்லவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் மற்றொரு புயலாக வீசுகிறார்கள்.அமைச்சர் ஒருவரின் காரையும் புரட்டி எடுத்து கோபத்தை காட்டி இருக்கிறார்கள்.
நிவாரணம் கிடைக்கவில்லை என்கிற அழுகுரல் நாலாபக்கமும் கேட்கிறது. இந்த நிலையில் விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் சூர்யா குடும்பத்தினர் 50 லட்சம் நிதியாக கொடுத்திருக்கிறார்கள்.
அனேகமாக ரஜினிகாந்த் ஒரு கோடி கொடுப்பார் என மக்கள். எதிர்பார்க்கிறார்கள்.