வேலாயுதம் படத்திற்கு பிறகு மூன்றரை ஆண்டுகள் சின்னதா ஒரு கேப் ,பெரிய கேப்புன்னு கூட சொல்லலாம் காரணம், ரானா இந்திப்பட வாய்ப்பு வந்தது. ஆனால் என்ன தான் ரீமேக் படம் என்றாலும் அதில் எனக்கு பிடித்த மாதிரி சில மாற்றங்களை செய்வேன்.. என் படங்களில் அது தான் நடக்கும் ஆனால் ,அங்கே என் சுதந்திரம் பறி போய் விடு ம் சூழல் உருவானது ஸோ, விலகி வந்துட்டேன். மூணரை வருடங்கள் வீணாப் போச்சு!!வேலாயுதம் படத்திற்கு முன்பே தனிஒருவன் படத்தின் கதை உருவாக்கப்பட்டு விட்டது.அதற்குள் வேலாயுதம் பட வாய்ப்பு.. விட முடியுமா! உடனே, இப்படத்தை பிறகு பார்த்துகொள்ளலாம் என இருந்து விட்டேன்.. ஒரு அசத்தலான போலீஸ் கதையை உருவாக்கியாச்சு. ஆனால்,இப்படத்திற்கு புதிய போலிஸ் கதாநாயகன் தேவை பட்டார். இந்தப் படத்தில் ஒரு டயலாக் வருகிறது. ‘நான் போலீஸ் மட்டுமில்ல…. போராளியும் கூட!’என்பதாக ,! அதற்.கு என்தம்பி பொருத்தமாக இருந்தான் அதே சமயம் அவனுக்கு சமமா ஒரு வில்லன் தேவைபட்டார். அரவிந்த் சாமி பொருத்தமாக இருப்பார் எனத் தோன்றியது. வழக்கம் போல இந்த முறையும் என் தம்பிகிட்ட கதை சொல்லல. வாடா… இந்த படத்துக்கு சரியான ஒருஅழகான வில்லன் பார்த்துருக்கேன். ரெண்டு பேரும் போய் கேட்போம். அவர் சரின்னு ஒத்துக்குவாரு… என கூறி என்தம்பி ஜெயம் ரவியை அழைத்துச் சென்றேன். அரவிந்த்சாமியும், ஹீரோவும் டைரக்டரும் சேர்ந்து வந்து கால்ஷீட் கேட்கிறீங்க. அது மட்டுமல்ல, இந்த மூணரை வருடங்கள் எந்த மாதிரி கதையில் நான் தேடிப் போய் நடிக்கணும்னு நினைத்தேனோ ,. அந்த கதையே என்னை தேடி வரும்போது நான் ஏன் விடணும்?எனக்கூறி எனக்கு ஒரு மூன்று மாதம் டைம் கொடுங்க ,அதற்குள் நான் பிட் ஆகிவிடுகிறேன் என்றார். சொன்ன மாதிரியே அழகான பிட்டான வில்லனாக வந்து நின்றார். வேலை சுலபமாகிருச்சு. தனி ஒருவன் என்ற தலைப்பில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த .படத்தை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் எடுத்து முடித்து விட்டேன்.ஜெயம் ரவிக்கு ஜோடியா நயன்தாரா, படத்தில் இவர் ஐபிஎஸ் தேர்வில் தோற்றுப்போன ஒருமுன்னாள் ஐபிஎஸ் மாணவி.இவர்களுக்குள் நிலவும் காதல்.. வேலாயுதம் படத்தில்,அகத்தை சுட்டி காட்டியுருந்தேன்.இதில், புறத்தை சுட்டிக்காட்டியுள்ளேன். பொதுவா சினிமாவுல ஒரு ஃபார்முலா உண்டு. ஹீரோ தன் வழியில் போவான். வில்லன் குறுக்கிட்டு வம்பு வளர்த்து கடைசியில் தோற்றுப் போவான். நான் கொஞ்சம் மாத்தி யோசிச்சேன். ஏன் காலம் காலமா வில்லன்தான் ஹீரோவின் லைப்ல குறுக்கிடணுமா? இப்படி ஒருத்தன் தப்பு பண்ணுறான். அவன் நம்ம லைன்ல கிராஸ் ஆனா பார்த்துக்கலாம்ங்கறது என்ன மாதிரியான ஹீரோயிசம்? அதை இந்த படத்தில் உடைத்திருக்கிறேன். இந்த படத்தில். வில்லன் பாட்டுக்கு சிவனேன்னு அவன் வேலையை பார்த்துகிட்டு இருக்கான். ஹீரோவே வில்லன தேடிப்போறான். முடிவு என்ன வாகிறது என்பது தான் இதில் சுவராசியம். அதே மாதிரி எப்பவும் எனது பெயர் எம்.ராஜா என்று தான் டைட்டில்கார்டில் இடம் பெறும். அது தான் தற்போது மோகன் ராஜாவாகியுள்ளது என்றார் மோகன்ராஜா.