‘சண்டக்கோழி 2’படத்தை தொடர்ந்து, வெங்கட் மோகன் இயக்கத்தில், விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்துவரும் புதிய படம் ‘அயோக்யா’.லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்து வரும் இப்படத்தில் கதாநாயகியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.இவர்களுடன்,இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார் – பார்த்திபன், பூஜா தேவரியாஉள்பட பலர் நடிக்கின்றனர். சாம்.சி.எஸ் இசையமைக்க, கார்த்திக் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்கிறார்.இப் படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடந்து வந்த நிலையில்,கையில் பீர் பாட்டிலுடன் போலீஸ் ஜீப் மீது விஷால் அமர்ந்திருப்பது போன்ற இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டது. இப் படம், அடுத்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.