தமிழுக்கு கேரள வரவு ஸ்வாஷிகா.
வைகை என்கிற படத்தின் நாயகியாக நடித்தவர்.தொடர்ச்சியாக தமிழில் மூன்று படம்.நடிப்புக்கு நட்டமில்லை என்று பேசிய சம்பளமும் கிடைத்தது.
ஒரு படம் நடித்ததுமே ஊர்வசி அவார்டு நமக்குத்தான் என்கிற மிதப்பு வரத்தான் செய்யும்! ஆனால் இவருக்கு வரல. தொடர்ச்சியா படமே வரலிங்க!
பேக்டு பெவிலியன் என கேரளத்துக்கே திரும்பினார்.
அங்கு படங்கள் கிடைத்தன.தொலைக்காட்சி வாய்ப்புகளும் வந்தன. ஆனாலும் வெறுப்பு தன்மீதே!
“ஏம்மா ஸ்வாஷிகா ,என்ன கஷ்டம்?” என்று கேட்டால் கண்ணீர் வராத குறை!
“எனக்கு சினிமான்னா உயிர்.! தமிழ் மலையாளம் இரண்டு மொழிகளிலுமே நடிச்சேன். நல்ல திறமையான நடிகைன்னு பேர் கிடைச்சது.
ஆனால் எதுவுமே என்னை உயரத்துக்குக் கொண்டு போகல.வெறுப்பா இருந்தது.
ஆசை ஆசையாக வந்த இடம் சினிமா.அங்கே வாய்ப்புக்கு தவம் இருக்க வேண்டியதாகிடுச்சி. மூணு வருஷம் சும்மா இருந்தேன். என் கூட படிச்சவங்க நல்லா இருக்கும்போது நான் மட்டும் ஏன் கஷ்டப்படனும்.?
சாவோமே! கார் ,லாரி முன்னாடி விழுந்து செத்துப் போவோம்கிற முடிவுக்குக்கூட வந்தேன். ஆனால் ஏதோ ஒரு சக்தி என்னை தடுத்தது.யோகா,தியானம்னு போனேன். இப்ப நிம்மதியா இருக்கேன்” என்கிறார் ஸ்வாஷிகா.
ஆல் த பெஸ்ட்.!