இடுப்பு அளவு ஆழத்தில் நிற்கிற ஆள் தன்னுடைய கால் நனையல என்று சொன்னால் எப்படி இருக்கும்? கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லால் அப்படித்தான் சொல்கிறார்.
“எங்களுக்கு மீ டூ பிரச்னையே இல்லை.!”
“என்னங்ணா இப்படி சொல்லிட்டிங்க?”
“அது ஒரு பேஃஷன் மாதிரி ஆகிப் போச்சு. பாலியல் தப்பு எங்கதான் நடக்கல? ஏன் சினிமாவை மட்டும் குறி வச்சு கேட்கிறீங்க? மீ டூ சீக்கிரமே காணாமப் போயிடும் பாருங்க,! நான் மீது பத்தி எதுவும் சொல்லப் போவதில்லை. எனக்கு அந்த அனுபவம் இல்லை.அதனால் எதையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை!” என்கிறார் .
ஆனால் கேரள சிபிஎம் எம்.எல்.ஏ .வும் நடிகருமான ஒருவர் மீது கேஸ்டிங் டைரக்டர் தேஜ் பாலியல் வக்கிரப்புகார் சொல்லி இருந்தார். நடிகர் அலேன்சியர் மீது நடிகை திவ்யா புகார் சொல்லி இருந்தார்.
இதையெல்லாம் மறந்திட்டிங்களா மோகன்லால் சார்?