என்னடா இன்னும் தளபதி விஜய் சைடில் இருந்து நியூஸ் எதுவும் வரலியேன்னு பார்த்தா டெல்டா மாவட்டங்களில் இருந்து செய்தியா கொட்டுது.
அரசு மீதும் அதிகாரிகள் மீதும் மக்களுக்கு இருக்கிற கோபத்தைப் பார்த்தால் உருப்படியா ஒரு உதவியும் செய்ய முடியாதுன்னு கணக்குப் போட்டிருப்பார் போல தளபதி விஜய்!
தன்னுடைய மன்றத்து தலைவர்களே கில்லியாக செயல்படும் போது அரசு எந்திரங்களை எதற்காக நம்பனும்?
கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கிற மன்ற தலைவர்களுடன் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்.
“இந்த சர்க்காரை நம்புவதை விட உங்களை நம்புகிறேன். அதிகாரிகளை விட சிறப்பாக உதவி செய்யுங்கள். உங்கள் அக்கவுன்டுக்கு பணம் வந்து சேரும்” என்று இரண்டு லட்சம் நாலு லட்சம் என்று அனுப்பி விட்டார்.
பாதிக்கப்பட்ட இடங்களுக்கு தகுந்த மாதிரி பணம் அனுப்பப்பட்டு இருக்கிறது. டெல்டா மாவட்டங்களுக்கு மட்டும் நாற்பது லட்சம் அனுப்பி இருக்கிறார் என்று மன்றத்தினர் சொல்கிறார்கள்.
குட்டி அரசாங்கம் போல தளபதி விஜய் மன்றங்கள் செயல்படுகின்றன.