இன்று மாலை கோவாவில் 49 வது சர்வதேச திரைப்பட விழா தொடங்குகிறது. தொடர்ந்து எட்டு நாட்கள் நடக்கும் இந்த விழாவில் சர்வதேச திரைப்பட பிரிவில் 15 படங்களும் சிறந்த இந்திய படங்கள் பிரிவில் 22 படங்களும் போட்டி இடுகின்றன. தமிழில் பரியேறும் பெருமாள், பேரன்பு,டுலெட்,பாரம் ஆகிய படங்கள் இடம் பெற்றுள்ளன, கலைஞர் கருணாநிதி ,ஸ்ரீ தேவி ஆகியோரை கவுரவிக்கும் வகையில் பராசக்தி,மாம் ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன.