நடிகர்கள் உதயா மற்றும்ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் தென்னிந்திய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் பதவியை இன்று மாலை திடீர் என ராஜினாமா செய்துள்ளனர்.சிறுபடத் தயாரிப்பாளர்களை பாதுகாக்கவும் அவர்கள் வளர்ச்சிக்காகவும் சங்கத் தலைவர் விஷால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி இருவரும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது .சமீபத்தில்,உதயா தயாரித்து நடித்த உத்தரவு மகாராஜா படவெளியீடு குறித்து நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, ‘“இன்றைய காலகட்டத்தில் எங்களைப் போன்றவர்கள் படம் எடுப்பது மிகவும் கஷ்டம்.எடுத்த படத்தை விநியோகஸ்தர்களைப் பார்க்க வைப்பது அதை விடக் கஷ்டம். 16 ம் தேதி மிடில் பட்ஜெட் படங்களை வெளியிட அனுமதித்தார்கள். ஆனால் தற்போது ‘அடங்க மறு, சீதக்காதி ‘ஆகிய இரு படங்களுக்கு அனுமதி கொடுத்திருப்பதாக கேள்விப்படுகிறேன். இந்த படங்கள் வந்தால் மத்த படங்கள், பாதிக்கப்படாதா? நான் தயாரிப்பாளர் சங்கத்திலும் இருக்கிறேன், நடிகர் சங்கத்திலும் இருக்கிறேன். என்னை பார்க்க வருவார்களா, அண்ணன் விஜயசேதுபதி ,ஜெயம் ரவி ஆகியோரைப் பார்க்கவருவார்களா?என கேள்வி எழுப்பியிருந்தார்.இந்நிலையில்,நடிகர்கள் உதயா மற்றும்ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் தென்னிந்திய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் பதவியை இன்று மாலை திடீர் என ராஜினாமா செய்துள்ளனர். இது குறித்து உதயாவிடம் கேட்டபோது ,விஷால் சிறு படத்தயாரிப்பாளர்களுக்கு நல்லது செய்வார் என்று நம்பித்தான் அவர் பின்னால் நின்றோம் பெரிய வெற்றியையும் தேடிக்கொடுத்தோம் .ஆனால் சிறுபடத் தயாரிப்பாளர்களுக்கு விசால் எந்த உதவியும் செய்யவில்லை . அவர் நடித்த படங்கள்வெளியீட்டுக்கு மட்டும் எங்களை பயன்படுத்தி கொண்டார் ஆனால் எங்களைப்போன்ற சிறுபடத்தயாரிப்பாளர்களுக்கு படவெளியீட்டின் போது பிரச்னை என்றால் அவர் போனே எடுப்பதில்லை. கவுன்சிலுக்கும் வருவதில்லை . என் படத்தை ரத்தக்கண்ணீரோடு தான் வெளியிட்டேன் சிறுபடத்தயாரிப்பளர்கள் உங்களை நம்பித்தானே ஓட்டு போட்டு உள்ளனர். சிறிய பட்ஜெட் படங்கள் வெளியீட்டின் போது பெரிய பட்ஜெட் படங்கள் வெளியிடக்கூடாது என்பது சங்கத்தில் பேசி முடிக்கப்பட்டது. ஆனால் அது கடைபிடிக்கப்படவில்லை. இதுக்கு தனியே ஒரு குழுவே இருக்கு. இந்த குழுவின் அனுமதியோடு நான்கு சிறிய படங்கள் வெளியாகும் போது, திடீரென இந்த குழுவின் முடிவைத்தாண்டி ஒரு பெரிய படம் உள்ளே நுழையுது எப்படி இது? விஷால் மீது எங்களுக்கு நம்பிக்கை போயிருச்சு . விஷாலின் போக்கு யாருக்கும் பிடிக்கல.எங்களைப்போல நாளை முதல் பல உறுப்பினர்கள் வெளியேறுவார்கள் .கவுன்சிலில் உழைக்கும் ஒரே ஆள் எஸ்,எஸ்.துரைராஜ் மட்டுமே .விஷால் மேடையில் ஒரு பேச்சும் நிஜத்தில் வேறு விதமாகவும் நடந்து கொள்கிறார்.இவரின் தலைமை நீடிக்க கூடாது.விசாலின் நெருங்கிய நண்பன் நானே இப்படி பேசுகிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் என்கிறார் ஆவேசமாக