பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு சிங்கப்பூரில் உள்ள ‘மேடம் டுசாட்ஸ்’ அருங்காட்சியகத்தில் அனுஷ்காவின் தத்ரூபமான மெழுகுச்சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை அனுஷ்கா சர்மா திறந்து வைத்தார்.இங்கு ஏற்கனவே பாலிவுட் பிரபலங்கள் ஐஸ்வர்யா ராய், ரித்திக் ரோஷன், கரீனா கபூர் உள்ளிட்ட பலருக்கும் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது.எனினும் அவற்றுக்கு இல்லாத சிறப்பு அனுஷ்காவின் மெழுகுச் சிலைக்கு மட்டும் இருக்கிறது அது என்ன தெரியுமா?இந்த அனுஷ்காவின் சிலை பேசும் .அது மட்டுமில்லாது அதன் கையில் உள்ள கேமரா மூலம் செல்ஃபியும் எடுக்க முடியும். அனுஷ்காவும் தன் சிலையின் அருகில் நின்று கொண்டு விதவிதமாக செல்பி எடுத்துக் கொண்டார்.