ரஜினிகாந்த் – மீனா நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1995-ம் ஆண்டு வெளியான படம் முத்து. ஜப்பானிலும் வெளியாகி, வெற்றி பெற்றதுடன் ரஜினிக்கு ஜப்பானிய ரசிகர்களை பெரும் அளவில் பெற்று தந்தது.ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் ரஜினிக்கு ரசிகர் மன்றம் வைக்கும் அளவுக்கு மாஸ் கூடியது.இந்நிலையில் நாளை ஜப்பானில் மீண்டும் ‘முத்து டான்சிங் மகாராஜா’ என்ற பெயரில்,இந்தப் படம் 4கே தொழில்நுட்பத்தில் திரைக்கு வருகிறது.இது குறித்து ரஜினிகாந்த் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.