நகுலின் இயற்கையான சுபாவத்துக்கு தகுந்த கதை.
ஒரு இடத்தில் நின்று நிதானமாக பேசுகிற ஆள் இல்லை. நின்ற இடத்திலேயே ஆயிரத்தெட்டு அசைவுகள் கொடுக்கிற ஆள்.அவரின் காலில் சக்கரத்தை மாட்டி முடுக்கி விட்டிருக்கிறார்கள்.
நகுலும் நண்பர்களும் படுத்துகிற பாடு நம்மை கீறி ரத்தம் பார்த்து விடுகிறது.
கிட்னி திருட்டை மறந்து போபியாவுக்குள் ஆராய்ச்சி பண்ணுகிற காலத்தில் மறுபடியும் ஆர்கன் திருட்டு , மனநிலை காப்பகம், மந்திரி திருடன் என்கிற பார்முலாவை நோண்டி இருக்கிறார்கள். இதுவே போதும் கதையின் போக்கு எப்படி போயிருக்கும் என்பதை தெரிந்து கொள்ள.!
மஞ்சள் துண்டு போட்ட முதல் மந்திரி, நல்ல மந்திரியை கவிழ்க்க கெட்ட மந்திரியின் சதி என தொடங்குகிற கதையில் ஒரு புலனாய்வு நிருபரை பலி கொடுத்து கதைக்கு உயிர் கொடுக்கப் பார்த்திருக்கிறார்கள். லொக்கேஷன் எல்லாம் சூப்பர். நகுலை விட நாயகி ஆஞ்சல் முற்றலாக தெரிகிறார்.
.நாசர்,பிரகாஷ்ராஜ்,தலைவாசல் விஜய் என திறமையான நடிகர்கள். சின்ன பட்ஜெட் படம் என்றாலும் உழைப்பில் குறை வைக்கவில்லை.ராஜ்பாபு இயக்கம்.
படம் எப்படி வாழ்க வளமுடன்!