ஊறுகாய் பாட்டிலை எடுக்கிறபோது அதில் தேள் உட்கார்ந்திருக்கும்னு யாருக்காவது தெரியுமா? ஹோட்டல் சர்வர் விதார்த் பேமிலி ரூமுக்குள் நுழைகிறபோது அங்கிருந்த ஜோடி கிஸ் அடிக்கும்னு அவருக்கு எப்படித் தெரியும்?!
‘ கிஸ் அடித்ததை ஏண்டா படம் எடுத்தே.” என்று விதார்த் வைத்திருந்த போனை அந்த லேடி பறித்துக் கொள்ள ஒரு வில்லங்கம் .
ரயில்வே ஸ்டேஷன் பார்க்கிங் ஏரியாவிலிருந்து யமகா பைக்கை நண்பனின் உதவியோடு கலெக்ஷன் வேலைக்காக விதார்த் பயன்படுத்த அது திருடப்பட்ட பைக் என மயிலாப்பூர் போலீசில் கேஸாக இன்னொரு அக்கப்போர்,
இப்படி கதை முழுவதும் தொடர் அக்கப்போர்கள்.
விதார்த்தும் இரண்டு நண்பர்களும் அடிக்கடி விவகாரங்களில் சிக்கினாலும் சரக்கு அடித்து கவலைகளை மறப்பது மட்டும் குறையவில்லை.
திருட்டு பைக் ,செயின் பறிப்பு, ஜாலி லைப் என திரிகிற இரண்டு விடலைகள் கதைக்கு சைடு டிஷ் மாதிரி!
காமடியாக கதை சொல்ல வேண்டும் என்று மலையாள இயக்குநர் ராஜேஷ் பாலா நினைத்திருக்கிறார். அது வாரப் பத்திரிகையில் தொடர் படிக்கிற உணர்வை தந்து விட்டது.
கும்மியடிக்கிற சில சீன்களை வெட்டி இருக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது. ஒரே மாதிரியான உணர்வைத் தருகிற காட்சிகளையும் நறுக்கி இருக்கலாம்.
விதார்த்தின் எண்ணிக்கையில் வண்டியும் ஒன்றாக இருக்கும் .குறிப்பிடும் படியாக எதுவுமில்லை.
இன்ஸ்பெக்டர் ஜான் விஜய். டிரேட் மார்க் மாடுலேஷன். சாந்தினிக்கு டூயட் சான்ஸ் எதுவுமில்லை. சுள்ளென வசனம்.அதில் காதல் கரிசனம். இது போதும் என இயக்குநர் முடிவு செய்திருக்கிறார்.
இது கட்ட வண்டி !