தோற்றத்தில் ‘சாப்ட்’ டாக இருந்தாலும் சாடுவதில் ஷார்ப். செம ஷார்ப்.!
கேரள நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு ரேவதி வேண்டாத விருந்தாளி ஆகி விட்டார். நடிகை பாவனா பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட திலீப்பை கேரள நடிகர் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளப் பட்டதை எதிர்த்துக் கொடி பிடித்த முக்கிய நடிகைகளில் ரேவதியும் ஒருவர்.
கிட்டத்தட்ட மோகன்லாலின் முதல் எதிரியாகவே மாறி விட்டார் என்று சொல்லலாம்.
சில நாட்களுக்கு முன்னர் பேசிய நடிகர் சங்கத்தலைவர் மோகன்லால் மீ டூ பிரச்னை மழுங்கிப் போய்விட்டது.நாளடைவில் மறந்து அல்லது மறைந்து போகும் என சொல்லியிருந்தார்.
இதற்காகத்தானே காத்திருந்தேன் என்பதைப் போல சாட்டையை கையில் எடுத்து விட்டார் ரேவதி. ஒரே சுழற்று! இன்னும் மோகன்லால் வாய் திறக்கவில்லை.
” மீ டூ மழுங்கிப் போனதாக பெரிய நடிகர் ஒருவர் சொல்லி இருக்கிறார் (பெயரை சொல்லவில்லை.) அந்த மாதிரியான ஆட்களுக்கு நாம் என்ன செய்தால் சொரணை வரும்?”என்கிற ரீதியில் சுளீர் ! “செவ்வாய்க் கிரக ஆளாக இருப்பாரோ?” என ஒரு படார்.!
சூறாவளி மாதிரிதான் இருக்கிறது கேரள திரையுலகம்.