சுவாமியே சரணம் ஐயப்பா.!
எல்லா வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு சொன்னதும் மகளிர் அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.
பாஜக வும் அதன் அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்பாட்டம் பண்ணவே சந்நிதானத்தில் சச்சரவு.
144 தடை உத்திரவு.
சரண கோஷம் கேட்கவேண்டிய சபரியில் அபத்தமான அரசியல் சார்ந்த கோஷங்கள்.
இந்த நிலையில் நடிகை உஷா சந்நிதானம் சென்றார். வாயில் கறுப்புத் துணையைக் கட்டிக்கொண்டு திருவனந்தபுரத்தில் இருந்து யாத்திரையை தொடங்கினார்.
தரிசனம் முடியும் வரை வாயில் காட்டிய துணியை அவிழ்க்கவில்லை.
“எதற்காக இந்த மவுன விரதம்?”
“சபரிமலையில் தெய்வீகமான சூழல் இருக்கிறது.அதற்கு பங்கம் வந்து விடக்கூடாது. அது கெட்டுவிடுமானால் நம்மை கடுமையாக பாதித்து விடும் ” என்றார்.
இது வரை உஷா மூன்று முறை தரிசனம் செய்து இருக்கிறார். வெளிநாட்டவர்களும் இரு முடி கட்டிக்கொண்டு சபரிமலை வந்தது குறிப்பிடத்தக்கது