நல்ல மனிதர் விஜய் ஆண்டனி.
யாரோ சிலர் மோசமான பாதையில் அவரை வழி நடத்துகிறார்களோ என்னவோ?
தொடர்ந்து அவரது படங்கள் தோல்வி அடைவதற்கு கதை தேர்வுதான் காரணம்.
அண்மையில் வெளிவந்த திமிரு புடிச்சவன் தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் படுத்து விட்டது.
ஆந்திராவில் அவரது பிச்சைக்காரன் தெலுங்கு டப்பிங் 18 கோடி வசூலித்தது.இதனால் ஆந்திர விநியோகஸ்தர்கள் விஜய் ஆண்டனி மீது மிகுந்த நம்பிக்கை வைத்து அவரது படங்களை வாங்கினார்கள்.
திமிரு புடிச்சவனின் ஆந்திர டப்பிங் ரோசகாடு. ஒப்பனிங்கே சரியில்லை என்று அங்குள்ள மீடியாக்களில் எழுதுகிறார்கள்.
சொந்தப்படத் தயாரிப்பில் கிட்டத்தட்ட 20 கோடிக்கு மேல் கடன் இருப்பதாக பேசுகிறார்கள்.
இதனால் தொடர்ந்து அவரால் படம் தயாரிக்க முடியுமா என்பது தெரியவில்லை.