அந்த காலத்துப் பெரிசுகளுக்கு கள்ளபார்ட் என்றால் நடிகர் நடராஜனைத்தான் தெரியும் . அந்தளவுக்கு பேமஸ். நாடகங்களில் கள்ளபார்ட் வேஷம் பெரிதாகப் பேசப்படும்.
அந்த கள்ளபார்ட் வேஷத்தைத்தான் அரவிந்தசாமி போடப்போகிறாரா? இயக்குநர் பி ராஜபாண்டி படத்துக்கு கள்ளபார்ட்’ என்று பெயர் வைத்திருக்கிறாரே? அவரையே கேட்போம்.
“இது ஆக்சன்,திரில்லர் படம்.ஏவி.எம். ஸ்டுடியோவில் மூணு செட் போட்டு நாற்பது நாள் ஷூட்டிங் நடந்தது. ரெஜினா கசென்ட்ராதான் ஜோடி.இன்னும் பாக்கி இருக்கு. படத்தை முடித்து விட்டு முழு விவரமும் சொல்றேன் ” என்கிறார்.