
“ஆரம்பத்தில் நான் பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-க்கு வேறு ஒரு கதையைத்தான் கூறினேன். ஆனால், என் வீட்டில் நடந்த சம்பவம், என்னை அடிப்படையாகக் கொண்ட கதை மேலும், அது என்னை ஊக்குவித்ததால் இந்தக் கதை பிறந்தது. அதுதான் ‘மான்ஸ்டர்’. இதுபற்றி இதற்கு மேல் என்னால் கூற முடியாது.”என்கிறார் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன்.
சரி எஸ்.ஜே.சூர்யா கதைக்குள் வந்தது எப்படி?
” நாயகனைப் பற்றி யோசிக்க அவசியமே எழாமல் அவர் எஸ்.ஜே.சூர்யா தான் என்று முடிவாகியது. அவர் தனக்கான பாணியில், எளிமையாக நடித்து அனைவரையும் இதயத்திலும் இடம் பிடிக்கக்கூடியவர். அதுமட்டுமல்லாமல், முதல் காட்சியிலிருந்து கடைசி வரை அவர் தான் மிகவும் பொருத்தமாகவும் இருப்பார். நாயகி ப்ரியா பவானி ஷங்கரும் தனது கதாபாத்திரத்தின் ஆழத்தைப் புரிந்துக் கொண்டு தன்னால் இயன்ற அளவில் அதிகப்படியாக முயற்சி செய்திருக்கிறார்.கருணாகரன் ‘ஒரு நாள் கூத்து’ படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால், இந்தப் படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரம் நிச்சயம் அனைவராலும் ரசிக்கப்படும்”என்கிறார் நெல்சன்.












