ஒரே காட்டில் வாழ்ந்தாலும் புலியும் மானும் ஒரே குளத்தில் ஒரே நேரத்தில் தண்ணீர் குடிக்க முடியாது. நடிகர் சங்கத் தேர்தலின் போதே எதிரும் புதிருமாக நின்றவர்கள்தான் விஷாலும், எஸ்.டி.ஆரும்.!
விஷாலுக்கு எதிரான அணியினர் சிம்புவை தீவிரமாக ஆதரிக்கிறார்கள்.
அன்பானவன்,அடங்காதவன்,அசராதவன் படம் தொடர்பாக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ஒரு பஞ்சாயத்தை கூட்டி இருக்கிறார்.
இதனால் சிம்புவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட்கார்டு போடப் போவதாக செய்திகள் அடி படுகின்றன. மணிரத்னம் படத்தின் போது கப்சிப்பென்று கவிழ்ந்து படுத்துக் கிடந்தவர்கள் சுந்தர் .சி படமான வந்தா ராஜாவாகத்தான் வருவேன் படம் வரும்போது மட்டும் சாமி ஆடுவதேன் என்கிற கேள்வியும் இருக்கிறது.
ரெட்கார்டு பிரச்னைக்கு பாட்டாலேயே எஸ்.டி.ஆர்.பதில் சொல்லி இருப்பதாகவும் ஒரு தகவல் கிடைத்திருக்கிறது.
“எனக்கா ரெட்கார்டு,எடுத்துப்பாரு என் ரிக்கார்டு”என்கிற பாடலை பாடி இருக்கிறாராம் .பாட்டுலேயே சவுக்கை சுழட்டி இருக்கிறாராம்.