பிரபல கன்னட நடிகரும், முன்னாள் மத்திய, மாநில அமைச்சருமான அம்பரீஷ் [வயது 66] சிறுநீரகதொற்று நோய் காரணமாக, வெளிநாட்டில், சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் உடல்நிலை தேறிய அவர் பெங்களூரு திரும்பினார். இந்த நிலையில், நேற்று இரவு திடீரென்று அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.உடனடியாக அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இரவு11 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.கன்னடத்தில் இருநூறு படங்களுக்கு மேல் நடித்துள்ள அம்பரீஷ், மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த அம்பரீஷ், கன்னடத்தில் இருநூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார். நடிகை சுமலதாவின் கணவரானஅம்பரீஷ் ரஜினியின் நெருங்கிய நண்பர் ஆவார். அம்பரீஷின் மரணம் குறித்துதகவல் அறிந்த ரஜினிகாந்த், நல்ல மனிதர், சிறந்த நண்பனை இழந்துவிட்டேன். உங்களை மிஸ் பண்ணுவேன் என தனது ட்விட்டரில் தெரிவித்து இருந்தார்.இந்நிலையில் இன்று காலை விமானம் மூலம் தனது நண்பருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பெங்களூரு வந்த ரஜினி ,சரத்குமார்,ராதிகா கண்ணீர் வீட்டு அழுதனர் .முன்னாள் முதல்வர் கிருஷ்ணா,இந்நாள் முதல்வர் குமாரசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். துக்கம் விசாரிக்க வந்தவர்கள் நேராக ரஜினியின் காலில் விழ ஆரம்பிக்கவே ரஜினி கிளம்பிவிட்டார்.
அம்பரீசின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக பெங்களூரில் உள்ள கந்தீரவா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரின் இறுதிச் சடங்குகள் நாளை கந்தீரவா ஸ்டுடியோவில் உள்ள டாக்டர் ராஜ்குமார் ஸ்மாரகா அருகே நடைபெற உள்ளது.அம்பரீஷ் கடைசியாக கலந்து கொண்டது கே.ஜி.எப் .திரைப்பட விழா தான்.