அரசியலில் நுழைவார் என்று சிலரும், அதெல்லாம் வரமாட்டார்,உடல்நிலை இடங்கொடுக்காது என்று மற்றும் சிலரும் சொல்லிவரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவ்வப்போது மக்களுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கத் தவறுவதில்லை.
இவரை பாஜக அனுதாபி என சொல்கிறவர்களும் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு பதில் சொல்லும் வகையில் இப்படி பேசினாரோ என்னவோ!
குழந்தைகள் நலம் தொடர்பான விழாவில் பேசிய ரஜினி கடுமையாக பேசி இருக்கிறார்.
“மேலை நாடுகளில் குழந்தைகள் நலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அந்த பூக்கள்தான் நாட்டின் எதிர்காலத்தை முடிவு செய்யக்கூடியவை.
ஆனால் குழந்தைகள் நலனுக்காக மத்திய மாநில அரசுகள் எதுவும் செய்யவில்லை.
உடனடியாக நலந்தரும் நல்லதிட்டங்களை அரசுகள் நிறைவேற்றவேண்டும். சிறுவர் சிறுமிகளை பிச்சை எடுக்கச் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.கொலைத் தண்டனைக்கு நிகரான தணடனையை கொடுக்க வேண்டும்.”என பேசி இருக்கிறார்.