கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் சொன்னவர் பாடகி சின்மயி. தொடர்ச்சியாக இவர் சொன்ன குற்றச்சாட்டுகள் கோடம்பாக்கத்தில் குமுறலை ஏற்படுத்தி இருந்தது.
ஆனால் தொடக்கத்தில் சூறாவளியாக கிளம்பிய புகார்கள் நாளடைவில் நலிந்த காற்றாக மாறி வலுவிழந்து போனது.
சின்மயி வெளிநாடுகளுக்கு கச்சேரிகள் நடத்த சென்று விட்டார்.
இவர் டப்பிங் யூனியனில் உறுப்பினர்.
ஆனாலும் இரண்டு ஆண்டுகளாக சந்தா கட்டவில்லை என்பதால் அவரை யூனியன் சஸ்பென்ட் செய்து நடவடிக்கை எடுத்தது.
எதிர்நடவடிக்கை எடுப்பாரா சின்மயி?
“டப்பிங் யூனியன் மீது சட்டப்படி நான் நடவடிக்கை எடுப்பேன். இப்படி நடக்கும் என்பது நான் எதிர்பார்த்ததுதான்.! அதிகாரப்பூர்வமான நடவடிக்கை கடிதம் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை.ஆனாலும் எனது டப்பிங் வாழ்க்கை முடிந்து போனதாகவே நினைக்கிறேன். 9 6 படம்தான் நான் கடைசியாக பணியாற்றியது. எனது விஷயத்தில் இசைக்கலைஞர்கள் சங்கம் என்ன செய்யப்போகிறது என்பது தெரியவில்லை.” என்று சொல்லி இருக்கிறார் .