சென்னை திருவிகா பாலம் பகுதியில் நேற்று இரவு மது போதையில் கார் ஓட்டியதாக நடிகையும்,டான்ஸ் மாஸ்டருமான காயத்ரி ரகுராம் மீது அபிராமபுரம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ.3,500 அபராதம் விதித்து அனுப்பி வைத்தனர்.இச் செய்தியை பிரபல முன்னணி தொலைக்காட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.