சிறுபடத் தயாரிப்பாளர்களைக் காப்பாற்றுவதற்காக தயாரிப்பாளர்கள் சங்கம் சில நடவடிக்கைகளை எடுத்தது.
எந்தபடங்கள் எப்போது திரையிடப்படவேண்டும் என்பதற்காக ஒழுங்கு படுத்தும் குழு அமைக்கப்பட்டது.
தீபாவளி ரிலீசாக திமிரு புடிச்சவன் வெளிவரும் என்பதாக அறிவித்தார்கள். ஆனால் அன்றைய தேதியில் வெளியிடாமல் பிறிதொரு தேதியில் வெளியிட்டார்கள். இதனால் பாதிக்கப்பட்ட சிறுபடத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷாலிடம் முறையிட்டனர். சிலர் சங்க செயற்குழு பதவியை விட்டு விலகினார்கள்.
சீதக்காதி படத் தயாரிப்பாளர்களும் குறிப்பிட்ட தேதியில் படத்தை ரிலீஸ் பண்ணாமல் வேறு தேதிக்கு மாற்றி இருக்கிறார்கள். டிசம்பர் 14 ம் தேதி வெளியிடுவதாக சொல்லி தற்போது 20 ம் தேதிக்கு மாற்றி இருக்கிறார்கள்.
இதனால் விஜய் ஆண்டனி,சீதக்காதி தயாரிப்பாளர்கள் மீது ரெட் கார்டு போடப்போவதாக தெரிகிறது,
இவர்களுக்கு பெப்சி தொழிற்சங்கம் ஒத்துழைப்புத் தரக்கூடாது என்று கேட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.