சின்ன வாயினால் மெல்ல மெல்ல முழு மிளாவையே விழுங்கிவிடும் மலைப்பாம்பு மாதிரி மனிதர்களும் இயற்கையும் சேர்ந்து பூமியை முழுங்கி வருகிறார்கள்.அரசியலில் முழுப் பாய் சுருட்டிகளுக்கு பஞ்சமா என்ன?
தல அஜித் படத்தில் வந்தது மாதிரி தமிழக வரை படத்தில் 4500 ஏக்கர் நிலம் காணாமல் போய் இருக்கிறது. நாகையில் இருந்து பிச்சாவரம் வரையிலான இடைப்பட்ட இடத்தில் இந்த அதிர்ச்சி.
ராமேஸ்வரம் பக்கம் ஒரு கிராமம் காணாமல் போய் இருக்கிறது.
இந்த அதிர்ச்சிகரமான செய்தியை சொன்னவர் நடிகர் ஆரி.
தோனி கபடி குழு ‘படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்த இடியை இறக்கி வைத்தார்.
எஸ்.நந்தகுமார் தயாரிப்பில் பி,ஐயப்பன் இயக்கத்தில் ‘தோனி கபடி குழு’வளர்ந்திருக்கிறது.
அபிலாஷ்,லீமா,தனாலி,சரண்யா இன்னும் பலர் நடித்திருக்கிற மண் சார்ந்த படம் .
ரோஷன் ஜோசப் இசை அமைத்திருக்கிறார். தமிழுக்கு அவரது முதல் படம்.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக டெல்டா பகுதியில் இருந்து வந்திருந்தார் ஆரி.
இந்த விழாவில் அவர் சுட்டிக் காட்டி குட்டியவைகளை வரிசைப் படுத்தலாம்.
1. சினிமா நல்லா இருக்கணும்னு யாரும் நினைக்கவில்லை.அவங்கவங்க படங்களைப் பற்றித்தான் கவலைப்படுறாங்க. இது தொடர்ந்தால் சீக்கிரமே தமிழ்ச் சினிமா கார்ப்பரேட் கைகளுக்கு போய் விடும்.நெட்பிளிக்சில் படம் பார்த்துக்கொள்ளலாம் என்று மக்கள் மாறிவிடுவார்கள் தியேட்டர்கள் மூடப்படும்.
2.தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம்,நடிகர் சங்கம் ஒற்றுமை இல்லாமல் போனால் சினிமா அழிந்து விடும்.