ராஜேஷ்குமாரின் நாவலைத் தழுவி பாபி சிம்கா.மதுபாலா ஆகியோர் நடித்திருக்கிற படம் அக்னி தேவ்.
இந்த படத்தின் முன்னோட்டகாட்சியை தற்போது வெளியிட்டிருக்கிறார்கள் .இதன்படி பார்த்தால் ஒரு அரசியல் கட்சியின் தலைவியாக மதுபாலா நடித்திருக்கிறார் என்பது புரிகிறது.,
ஜெயலலிதாவை நினைவூட்டும் வகையில் மேக்கப் இருக்கிறது.
வெள்ளைப் புடவை அணிந்திருக்கிறார்.
போலீஸ் அதிகாரி பாபி சிம்காவுக்கும் இவருக்குமிடையில் நடக்கிற பல பரிட்சை மாதிரி தெரிந்தாலும் அரசியல் வசனங்கள் அதிமுகவை குறிப்பதாகவே தெரிகின்றன .
மதுபாலா அமர்ந்திருக்கும் அலுவலகத்தில் பின்னால் ஜெயலலிதாவின் படமும் இருக்கிறது.
சகுந்தலா தேவியாகிய நான் “என தொடங்குகிற வசனத்தைக் கேட்டால் பதவிப் பிரமாணம் செய்வதற்கான காட்சியின் தொடக்கம் எனத் தோன்றுகிறது.
“எத்தனை ஆம்பளைகள கால்ல போட்டு நசுக்கிட்டு இந்த இடத்துக்கு வந்திருக்கேன் தெரியுமா?”
“அரசியல்ல என் கனவுல வர்ற எதிரிகளைக்கூட விட்டு வைக்கிறதில்ல தெரியுமா?”
“என் வீல் சேர் டயர நக்கிட்டு கிடக்கிறதா இருந்தா கிடங்க”
“குனிஞ்சி குனிஞ்சி கும்பிடுபோட்டா நம்பிடுவேன்னு நெனச்சிங்களா ”
இப்படி காரமான வசனங்கள் அந்த முன்னோட்டக்காட்சியில் இருக்கின்றன.
இதற்கு என்ன பஞ்சாயத்து நடக்கப்போகுதோ தெரியல.