.இடையில் இருப்பது ஒரே நாள்.!
இவர் அவரை மிஞ்சினாரா ,இவரை அவர் மிஞ்சினாரா என தல ரசிகர்களும்,தளபதி ரசிகர்களும் விவாதம் நடத்திக் கொண்டிருக்கிற வேளையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2 பாயின்ட் ஓ படத்துக்கான எதிர்பார்ப்பு உலக அளவில் பெரியதாக இருக்கிறது.
6 0 0 கோடி பட்ஜெட் .வித்தியாசமான படம் ,
புதிய முயற்சி என வருடங்களை விழுங்கிய படம்
“எஸ் ..இது இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் படம். ஷங்கர் புதிய தளத்துக்குக் கொண்டு போய் இருக்கிறார்.”என்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
“அபூர்வ ராகங்கள் படத்துக்குப் பிறகு நான் நெர்வஸாக இருந்தபடம் இதுதான். ஏன்னா இதில் 40 பெர்சன்ட் வரை விசுவல் எபெக்ட்ஸ்தான்!
அதில நாம்ம எப்படி இருக்கோம் என்பதை பார்க்கிறதுக்கு ஆசையாக இருக்கு. இந்த படத்தின் கிளைமாக்ஸ் சமயத்தில் எனக்கு உடம்புக்கு சரியில்லாம போச்சு.அதான் கொஞ்சம் மனசுக்கு கஷ்டம். தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் செலவு செய்திருக்கிறார். அவரை பாராட்டியே ஆகணும்.நல்ல மனிதர் “என்கிறார் ரஜினி.