“என்னடா இது இந்த பாகவதருக்கு வந்த சோதனை..
இந்தம்மா எல்லாம் அட்வைஸ் பண்ற அளவுக்கா நம்ம கமல்.ரஜினி இருக்காங்க?” என்று ஒரு பக்கம் சங்கடமாக இருந்தாலும் அந்தம்மா விஜயசாந்தி சீனியர் ஆச்சே..! கேட்டுத்தான் ஆகணும்.
ஓட்டுக் கேட்கப் போகிற எடத்தில எப்படியெல்லாம் டிராமா போடுவோம். கிழவியை அணைத்துப் போஸ் கொடுக்கிற தலைவர்கள் மந்திரியாக மாறியபிறகு கிழவிகளை தொட்டாவது பார்த்திருக்கிறார்களா?
புயல்,மழை சேதங்களை பார்வையிடுகிற போது டிஸ்டன்ஸ் மெயின்டன் பண்றோம்ல.
அதனால் சீனியர்சுக்கு மரியாதை கொடுத்து கேட்டாகவேண்டும்.
“அரசியல் ஒன்னும் அவ்வளவு ஈசியானது இல்ல.நான் அரசியலுக்கு வந்து இருபது வருஷம் ஆச்சு. அந்த இருபது வருசமும் தெலங்கானாவுக்காக போராடி இருக்கேன்.கமல் ரஜினி யார் வேணும்னாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் மக்களுக்காக உண்மையாகப் போராடனும்.மக்கள் மத்தியில் இருக்கணும்.”என்கிறார் விஜயசாந்தி.