இதுநாள் வரை ‘அட்டகாசம் ‘பண்ணாமல் இருந்து வந்த தல ரசிகர்கள் விஸ்வாசம் அப்டேட் வந்த பிறகு உற்சாகத்தின் உச்சத்துக்கே சென்று விட்டார்கள்.
தலயின் பெயர் ‘தூக்குதுரை ‘என்று தெரிந்த பின்னர் பலர் அவரைப்போல மீசை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
தூக்குதுரை என்பவர் யார் தெரியுமா? நெல்லை மாவட்டத்தில் சிங்கம்பட்டி ஜமீன் .அரண்மனைக்கு பின்பக்கமாக மகாதேவர் கோவில் கட்டி இறைவனை வணங்கி வந்தது ஜமீன்.
அந்த கோவிலில் ஒரு தூணில் பெரியசாமி தேவர் சிலை இருக்கிறது. தலைப்பாகை,கிருதா மீசை என கம்பீரமாக இருக்கும். இவரின் நண்பரை பிரிட்டிஷ் ஜெயிலர் அநியாயமாக சிறை வைத்தான் என்பதற்காக அவரை கொன்று விட்டார் .
இதனால் பெரியசாமித் தேவரை பிரிட்டீஷார் தூக்கில் போட்டு விட்டார்கள்.1 7 .1 0 .84