நாட்டில் எத்தனையோ பஞ்சாயத்து ,அதுல இதுவும் ஒன்னு.
டான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுராம் போதையில் கார் ஓட்டி மாட்டி அபராதம் கட்டினார் என்று ஒரு செய்தி.
அதற்கு மறுப்புத் தெரிவித்து காயத்ரி காரணம் சொன்னது இன்னொரு செய்தி.
அதில் தனக்கு பிஜேபியில் எதிர்ப்பு கோஷ்டி இருப்பதாகவும் அவர்கள் கிளப்பிய பொய்யான செய்தி என்று குற்றம் சாட்டி இருந்தார்.
ஆனால் ‘காயத்ரிரகுராம் கட்சியிலேயே இல்லையே ‘என இடையில் புகுந்து தமிழிசை சவுந்தரராஜன் ஒரு வெட்டு வெட்டினார்,.
காயத்ரியிடமா நடக்கும்? கிளர்ந்தெழுந்து விட்டார்.!
“தமிழிசை மேடம்!நான் பிஜேபியில் மெம்பர். அதுவும் கம்ப்யூட்டரைசிடு மிஷின் வழியாக ஆனவ!. நீங்க உங்க விருப்பப்படி சேர்க்கவோ,நீக்கவோ இது ஒன்னும் லோக்கல் கட்சி இல்லை. தேசிய கட்சி.”என்று பொளேர்னு ஒன்னு விட்டிருக்கிறார்.
அடுத்து என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்