சர்கார் படம் வந்ததில் இருந்தே சிக்கல்கள்,சிரமங்கள் பல பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது.
அரசின் திட்டங்களை விமர்சனம் செய்யக்கூடாது என்று வாய்ப்பூட்டு போடப்பார்க்கிறார்கள்.நீதி மன்றத்தில் தமிழக அரசு முறையிட்டிருக்கிறது.
“இயக்குநர் ஏஆர்முருகதாஸ் இனிமேல் அரசின் நலத் திட்டங்களை விமர்சிக்ககூடாது “என்று தமிழக அரசு கோர்ட்டு வாசல் ஏறி இருக்கிறது.
தளபதி விஜய்யின் படம் என்றாலே அரசுக்கு ஒரு பயம் வந்து இருக்கிறது. அவரை விரோதியாகவே ஆளுங்கட்சியினர் பார்க்கிறார்கள்.
இன்று நீதிமன்றம் என்ன சொல்லுமோ தெரியாது.
மக்கள் நீதி மய்யத் தலைவர் உலகநாயகன் கமல்ஹாசன் பாசிச போக்கை வன்மையாக கண்டித்திருக்கிறார்.
“சர்கார் படம் மத்திய தணிக்கைக் குழுவினால் அனுமதிக்கப்பட்டுள்ள படம். மக்களிடமிருந்து கருத்துரிமையை பறிக்கப் பார்ப்பது ஜனநாயகம் அல்ல. பாஸிசம்.அது முன்னரே தோற்கடிக்கப்பட்டிருக்கிறது.மீண்டும் தோற்கடிக்கப்படும்” என்று கடுமையுடன் கமல் எச்சரித்திருக்கிறார்.