சத்யவதி பாட்டிக்கு 1 0 6 வயது.
காசி ,ராமேஸ்வரம் போக வேண்டிய காலகட்டம். சிவா,ராமா என்று உச்சரிக்க வேண்டிய வயது.
இத்தனை வயதாகி இருக்கிறதே அதுவே சாதனைதானே என்று லோக்கல் டி.வி.சேனல்காரர்கள் அந்த மூதாட்டியை சந்தித்து பேட்டி எடுத்து ஒளி பரப்பினார்கள்.
இம்மாதியானவர்களிடம் வழக்கமாக கேட்கிற கேள்விதான்!
“உங்கள் ஆசை என்ன பாட்டி!”
“எனக்கா …நான் கட்டையை போடுறதுக்குள்ள நடிகர் மகேஷ்பாபுவை பார்க்கனும்பா!”
இந்த ஒளிபரப்பை பார்த்த ரசிகர்கள் மகேஷ்பாபுவிடம் பாட்டியின் ஆசையைப் பற்றி சொல்லி இருக்கிறார்கள் “அப்படியா அந்த பாட்டியை ராமோஜி ராவ் ஸ்டுடியோவுக்கு கூட்டிட்டு வந்திருங்கப்பா “என்று சொல்லி வரவழைத்திருக்கிறார். அந்த பாட்டிக்கு சந்தோசம் தாங்கல. நிறைய ஆசிர்வாதம் பண்ணி விட்டார்.