“இந்திய திரை உலகத்தின் விஞ்ஞானம் சார்ந்த படங்களுக்கு 2.ஓ ஒரு பாட புத்தகமாக இருக்கிறது “என்று படத்தைப் பார்த்த உமைர் சந்து என்கிற துபாய் பிரமுகர் கூறி இருக்கிறார். இவர் அந்த நாட்டு தணிக்கைக்குழுவில் இருக்கிறார்.
“ரஜினி ,அக்ஷய் இருவரும் படத்தின் ஜீவனாக இருக்கிறார்கள். பாலிவுட் நடிகர்களால் செய்ய முடியாத சாதனையை ரஜினி செய்திருக்கிறார்.படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை தொய்வே இல்லாமல் படம் செல்கிறது
ஷங்கர் இந்தியாவின் தலை சிறந்த இயக்குநர் என்பதில் சந்தேகம் இல்லை.இது ஓர் ஆண்ட்ராய்டு புரட்சி என்றே சொல்லலாம். ஆமி ஜாக்சனின் திறமையான நடிப்பும் காட்சி அமைப்புகளும் ரசிகர்களுக்கு மகத்தான விருந்து என்றே சொல்லலாம் ” என அவர் சொல்லி இருக்கிறார்.