அடிபட்டவனுக்குத்தான் அதன் வலி தெரியும். ஓரமாக உட்கார்ந்து நொட்டை சொல்லிட்டுப் போறவனுக்கு என்ன கவலை.!
சர்கார் படத்தில் இலவசங்களைக் கண்டித்து காட்சிகள்,வசனங்கள் இருந்ததற்கு அதிமுக அரசு ஆத்திரம் கொண்டது.
அதிகாரம் கையில் இருந்ததால் அராஜகம் செய்ய முடிந்தது. தியேட்டர்களில் இருந்த கட் அவுட் பேனர்களை கிழிக்க முடிந்தது. இதெல்லாம் அநாகரீகத்தின் உச்சம் என்பதை மக்கள் உணராமல் இல்லை.
ஆனால் ஆட்சியாளர்களின் அடக்கு முறைக்கு அஞ்சி அமைதியாக இருந்து விட்டார்கள்.
ஆனாலும் அரசு படைப்பாளிகளின் உரிமைகளில் நீதி மன்றத்தின் வழியாக கை வைக்கப்பார்த்தது.
“அரசின் திட்டங்களை காட்சிப் படுத்தக்கூடாது இனிவரும் படங்களில் அரசை விமர்சனம் செய்யக்கூடாது, மன்னிப்பு கேட்க வேண்டும் “என்று முருகதாசுக்கு ஆணையிட கோரி ஒரு மனுவை நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது தமிழக அரசு.
ஆனால் அந்த நிபந்தனைகளை ஏற்க முடியாது என்று முருகதாஸ் தரப்பில் தெரிவித்திருக்கிறார்கள். மன்னிப்பும் கேட்க முடியாது என்று சொல்லி விட்டார். இதை தளபதி விஜய்யும் ஆதரித்திருக்கிறார்.
கள்ளக்குறிச்சி ஆளுன்னா சும்மாவா?