“அம்பரீஷ் மறைவுக்கு ஏன் வரவில்லை?
“அவரால் தேர்தலில் வெற்றி பெற்ற திவ்யா ஸ்பந்தனா என்கிற குத்து ரம்யாவுக்கு என்ன ஆச்சு?” என்று கர்நாடகத்தில் கேட்கத்தொடங்கிய பின்னர்தான் மாபெரும் வேதனையில் அவர் இருப்பது தெரிய வந்தது.
தீவிர காங்கிரஸ் வாதியான அவர் கட்சி நடவடிக்கைகளிலும் அக்கறை காட்டவில்லையே, அவருக்கும் கட்சிக்கும் பிணக்கா? சண்டையா,சச்சரவா என்றும் பலவிதமாக கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
ஆனால் விதி வலியது!
அவர் கடுமையான மன உளைச்சலில் இருக்கிறார்.
காரணம் காலில் கட்டி, அதனால் வந்த வலி! தரையில் பாதம் வைக்க முடியவில்லை.
தொடக்க நிலையிலேயே கவனித்திருக்க வேண்டும். கவனிக்க வில்லை. தற்போது பயாப்சி முடிவுக்காக காத்திருக்கிறார்..
“என்னை போல யாரும் கவனக்குறைவாக இருக்க வேண்டாம். வலிதானே என அலட்சியப்படுத்த வேண்டாம். அதுவே கட்டியாகி புற்றுநோய்க்கு காரணமாக இருந்து விடும். நான் பயாப்சி முடிவுக்காக காத்திருக்கிறேன்” என்கிறார்.
அம்பரீஷ் மரணத்துக்கு இவர் வராததற்கு நியாயமான காரணம் அதுதான் என்றாலும் சிலர் ரம்யாவை கன்னாபின்னாவென பேசிவருகிறார்கள். நோயின் கொடுங்கரத்திலிருந்து விடுபடுவார் என நம்புவோம் .